Open top menu
#htmlcaption1 Computer Tips and Tricks Make Your Connection Securely Science Research Tutorials in Tamil
Tuesday 17 March 2015
இயங்காமல் நிற்கும் அப்ளிகேஷன்களை, வலுக்கட்டாயமாக நிறுத்த




விண்டோஸ், ஆப்பிள் மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், செயலிகள் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, எந்த செயல்பாட்டையும் தொடராமல், விக்கித்து நிற்பது போல நிற்கலாம். இவை தொடருமா? என்ற கேள்விக்கு நமக்குப் பதில் கிடைக்காது. இவற்றை மூடிவிட்டு, பின்னர் திறந்து இயக்கவும் எந்த வழியும் கிடைக்காது. இதற்காக, இயக்கத்தில் இருக்கும் மற்ற புரோகிராம்களின் இயக்கத்தை நிறுத்தி, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதும் நேரத்தை வீணடிக்கும் முயற்சியாகும். அப்படியானால், இவற்றை எப்படித்தான் மூடுவது? என்ற கேள்வி எழுகிறது. அதற்கான, செயல்படுத்தக் கூடிய சில வழிகளை இங்கு காணலாம்.
ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், இது போல எந்த வழியிலும் செல்லாமல், இயங்காமல் நிற்கும் அப்ளிகேஷன்களை, வலுக்கட்டாயமாக நிறுத்த சில வழிகளைக் கொண்டுள்ளன. அந்த வழியைப் பின்பற்றி இந்த புரோகிராம்களை மூடிவிட்டால், பின் மீண்டும் இயக்கும்போது, சரியாக அவை இயங்கத் தொடங்கும். அந்த வழிகள் எவை எனக் காணலாம்.



ஐபோன் மற்றும் ஐபேட்: 

DXwFBON.jpg?1




இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ஒன்றை ஐபோன் அல்லது ஐபேடில், வலுக்கட்டாயமாக நிறுத்த, ஹோம் பட்டனை இருமுறை அழுத்தவும். இது உடனே, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களின் பட்டியலைக் காட்டும். இடம் வலமாகச் சென்று, எந்த அப்ளிகேஷனை வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த அப்ளிகேஷனுடைய தம்ப்நெய்ல் படத்தினைத் தொட்டு, மேல்புறமாக இழுத்து, திரைக்கு அப்பால் விட்டுவிட்டால், அப்ளிகேஷன் இயங்குவது நிறுத்தப்படும். அடுத்த முறை, இயக்கப்படும்போது, அப்ளிகேஷன் சரியாக இயங்கி செயல்படும். இவ்வாறு நிறுத்துவதனால், இயக்க முறைமைகள் சேவ் செய்யப்படுவது இல்லை. மேலும், நீங்கள் அந்த புரோகிராமினை இயக்கப் போவது இல்லை என்றாலும் அப்படியே விட்டுவிடலாம். ஆனால், அப்ளிகேஷன் ஒன்று, இவ்வாறு முறையற்ற முறையில் நின்று போவது சரியல்ல. அதனை, இவ்வாறு நிறுத்துவதே சரியான வழி.



ஆண்ட்ராய்ட்: 

8HojqHi.jpg



அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் நிறுத்துவதற்கான வழி recent app switcher டூலைப் பயன்படுத்துவதுதான். சில சாதனங்களில், அண்மையில் பயன்படுத்திய அப்ளிகேஷன்களைக் காட்டும் பட்டன் இருக்காது. அந்த சாதனங்களில், ஹோம் பட்டனைத் தொடர்ந்து அழுத்தி, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இங்கும் அப்ளிகேஷனுடைய தம்ப் நெய்ல் படம் அல்லது பட்டியலில் அதன் பெயரைத் தொட்டு இழுத்து திரைக்கு மேலாக விட்டுவிடலாம். அப்ளிகேஷன் மூடப்பட்டு, அடுத்த முறை இயக்கப்படுகையில், புதியதாய்த் தொடங்கப்படும். ஐ,ஓ.எஸ். சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, ஆண்ட்ராய்ட் சாதனங்களில் வலுக்கட்டாயமாக ஓர் அப்ளிகேஷனை நிறுத்துவதனை மேற்கொள்ளக் கூடாது. ஆண்ட்ராய்ட் சிஸ்டமே, அது போலச் செயல்படும் அப்ளிகேஷன்களை நிர்வகித்திடும்.



விண்டோஸ்: 

xegRzLS.png?1



விண்டோஸ் இயக்கத்தில், இது போல உறைந்து நிற்கும் அப்ளிகேஷன்களை முழுமையாக நிறுத்த டாஸ்க் மானேஜர் (Task Manager) டூல் பயன்படுகிறது. டாஸ்க் மானேஜரைத் திறக்க, பலரும் Ctrl+Alt+Delete பயன்படுத்துவார்கள். சற்று விரைவாக இதனைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, டாஸ்க் மானேஜர் ஷார்ட் கட் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். அல்லது Ctrl+Alt+Escape பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இன்னும் சற்று வசதியான டாஸ்க் மானேஜர் தரப்பட்டுள்ளது. இதில், எந்த அப்ளிகேஷனை நிறுத்த வேண்டுமோ, அதனைத் தேடி, 'End task” பட்டனை அழுத்தினால் போதும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், டாஸ்க் மானேஜரில், “Store apps”பயன்படுத்தி அப்ளிகேஷனை நிறுத்தலாம். அல்லது, முரண்டு பிடிக்கும் அப்ளிகேஷன் விண்டோவின் திரையில், மேலாக விரலை வைத்து, கீழாக இழுத்துவிடலாம். அப்ளிகேஷன் ஒரு தம்ப் நெய்ல் படமாக மாறும் வரை இழுத்து விட வேண்டும். அல்லது, தம்ப்நெய்ல் படம், அப்ளிகேஷன் டைலாக மாறும் வரை இழுத்து, பின் விட்டுவிட வேண்டும். விண்டோஸ் அதனை நிறுத்திவிடும்

Read more
Saturday 7 February 2015
Android Mobile ல் Antivirus அவசியம்தானா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!


     Android மொபைல்களில் Anti Virus Install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர்  (யாருக்கு தெரியும்friends எல்லாரும் சொன்னாய்ங்க அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும, இது ஒரு Virusa கூட புடுச்சதில்ல சாமி )என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில்anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்.



  நானும் அதைத்தான் கூறுகிறேன் .நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான் உபயோகிக்கும்AntiVirus மென்பொருள் சில
Applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட
அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது.


 Android என்பது ஒரு secure செய்யப்பட்ட OS இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்
ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம் இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார் சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன்
virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என
யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ? அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க
முழுக்க சோதித்த பின்னரே இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன் anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை புரிய வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள் இதனை உடனே uninstall செய்துவிடுங்கள் வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்
Read more
Wednesday 4 February 2015
வீடு தேடி வருகிறது ரயில் டிக்கெட்





ஆன்லைனில் நாம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி இருக்காது. சிலரோ தங்களது கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை வெளியிட தயங்குவார்கள்.



இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிய முறை ஒன்றை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி நாம், வழக்கம்போல ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, நாம் பதிவு செய்த டிக்கெட்டை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் நம் வீட்டிற்கு நேரில் வருவார். அவரிடம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்திவிட்டு, டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த வசதியைப் பெற, பயண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை நேரில் வந்து தருவதற்காக, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.40ம், ஏ.சி. வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60ம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. முதல்கட்டமாக இந்த வசதி, 200க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
Read more
Monday 2 February 2015
ஐபோன் மூலம் கணினியை இயக்க புதிய செயளி


   ஆன்டிராய்டு கருவிகளை தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஐஓஎஸ் கருவிகளுக்கும் புதிய செயளியை வெளியிட்டுள்ளது. இந்த செயளி மூலம் வாடிக்கையாளர்கள் கணினியை ஐபோன் அல்லது ஐபேட் மூலம் பயன்படுத்த முடியும். க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் என்றழைக்கப்படும் இந்த செயளியின் ஐஓஎஸ் பதிப்பு மூலம் கணினியை ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் மூலம் இயக்க முடியும். மேலும் இந்த செயளி உங்கள் நண்பர்களும் சிறிது நேரம் கணினியை பயன்படுத்தும் வசதியை கொடுக்கின்றது. இதை பயன்படுத்த, முதலில் கணினியில் ரிமோட் அக்சஸ் பதிவு செய்ய வேண்டும், இதன் பின் ஐஓஎஸ் கருவியில், செயளியை ஓபன் செய்து இணைக்கப்பட்ட கணினியை இயக்க முடியும். இந்த செயளி ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Read more
Sunday 1 February 2015
இந்தியாவில் வாய்ஸ் கால் சேவையை தொடங்கியது வாட்ஸ்அப்

      
    'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது. அதிக கொள்ளளவு உள்ள படங்களையும், வீடியோக்களையும் உடனுக்குடன் மிக விரைவாக அனுப்ப, வாட்ஸ் அப் என்ற, செயலி உதவுகிறது. இத்துடன், பேசும் வசதியையும் இணைக்க, நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், குறிப்பிட்ட சிலரிடம், சோதனை அடிப்படையில், 'வாட்ஸ் அப்'பில் பேசும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. 


யினும், பொதுவான பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இதுகுறித்து, 'வாட்ஸ் அப்' நிறுவனம் சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், நேற்று முதல் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் 'வாட்ஸ் அப்'பில் பேசிக் கொள்ள வசதி கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தில் (ஆணை தொகுப்பில்) இயங்கும், 'வாட்ஸ் அப்' செயலி வைத்துள்ள அனைவரும், அதன் மூலம் நண்பர்களிடம் பேச முடியாது. இதற்காக, 'வாட்ஸ் அப்' வலைதளத்தில் நுழைந்து, மேம்படுத்தப்பட்ட, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே அதை பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேசுவதற்காக இணைய முடியாது. எதிர் தரப்பில் பேசுபவரிடமும், அந்த பைல் இருந்தால் மட்டுமே பேசலாம். அவ்வாறின்றி, நண்பருக்கு அந்த பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேசலாம். உள் அழைப்பு, வெளி அழைப்பு எண்களும் ஸ்மார்ட் போனைப்போலவே இதிலும் சேமிக்கப்படும். கம்ப்யூட்டரிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் வாட்ஸ்அப்-வெப் சேவையை சில வாரங்கள் முன்பு வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருந்தது. வாட்ஸ்அப்பை, பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது முதல் இதுபோன்ற அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
Read more
Friday 30 January 2015
கணினி வாட்ஸ்ஆப் செயளியால் முடியாதவை





வாட்ஸ்ஆப் இன்று உலகில் பலரும் அதிகமாக பயன்படுத்தி வரும் செயளிகளில் ஒன்றாக இருக்கின்றது. மாதம் 700 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் கணினியிலும் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நீண்ட காத்திருப்பிற்கு பின் வாட்ஸ்ஆப் செயளியை கணினியில் பயன்டுத்தும் வசதி அளிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் இதனை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.


  • ஐபோன் வாட்ஸ்ஆப் குருந்தகவல்களை இணையம் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் கணினியுடன் இனைக்கப்படுகின்றது, ஆனால் இந்த வசதி ஐபோன்களில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

  • போன் இன்டெர்நெட் வாட்ஸ்ஆப் இணையத்துடன் ஸ்மார்ட்போனை QR கோடு மூலம் இனைத்த பின் குருந்தகவல்களை அனுப்பவும் முடியும் பெறவும் முடியும். ஆனால் இதற்கு இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனிலும் இணைய வசதி இருக்க வேண்டும்.

  • வாட்ஸ்ஆப் வெப் வசதியை கூகுள் க்ரோமில் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.


  • மொபைல் போன்று கணினியில் பயனாளிகளை ப்ளாக் செய்ய முடியாது




Read more